அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயம்

சென்னை

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து
செயல்பாடுகளும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு, பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துவது, மற்றும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வது போன்ற திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு நவீன முறையில் பாடம் நடத்த வசதியாக 'வீடியோ கான்பரன்ஸ்' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகின்றன.

இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி இயக்ககம் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x