சென்னை
அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய செல்போன் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் கற்றல் முறைகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை செல்போன் செயலி மூலம் கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் சோதனை முயற்சியாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்
கல்வி உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் புதிதாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் வகுப்பறைகளில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியர்கள் தினமும் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவர்.
பள்ளி ஆய்வின்போது இந்த செயலியின் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும்.
முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தனர்.
WRITE A COMMENT