அந்தக்காலத்தில் வாழ்ந்த ஃபோராமினிஃபெரா (foraminifera) எனும் கடல் வாழ் உயிரினம் தன்னை சுற்றி CCaO3 எனும் கால்சியம் கார்பனேட் பொருளால் ஆன ஓடு கட்டி வாழும். மடிந்த பின்னர் கால்சியம் கார்பனேட் கடலடியில் வெங்காய தோல் போல அடுக்கு அடுக்காகப் படிந்து விடும். மேலே உள்ள அடுக்கு சமீபத்தில் இறந்த ஃபோராமினிஃபெராவின் ஓடுகளினால் ஆனது. கிழே உள்ள அடுக்குகள் காலத்தால் முந்தியவை.
கால்சியம் கார்பனேட் பொருளில் கார்பனும் உண்டு, ஆச்சிஜனும் உண்டு. இவற்றில் புவியின் வெப்பத்தை பொருத்து கார்பன்14 ஆக்சிஜன்18 ஆகிய ஐசோடோப்புகள் அளவு அமையும். கடலின் அடியில் உள்ள குறிப்பிட்ட கால்சியம் கார்பனேட் அடுக்கில் உள்ள கார்பன்14 அளவை வைத்து அந்த அடுக்கு உருவான முற்காலத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கார்பன் செறிவு இருந்தது என அறியலாம். அதிலிருந்து அந்தகால புவி வெப்ப நிலைமையை கண்டறியலாம். அதே போல குறிப்பிட்ட அடுக்கில் கூடுதல் அளவு ஆக்சிஜன்18 இருந்தால் புவி குளிர் நிலைமையில் இருந்தது என அறியலாம்.
WRITE A COMMENT