திருச்சி: சாரணர் இயக்கத்தின் ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றிபெற்ற தூத்துக்குடி சாரணர் இயக்கத்துக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெற்றி கேடயத்தை வழங்கினார்
பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாநில பெருந்திரளணி திருச்சியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் கிராமிய நடனத்தில் முதலிடத்தையும், கலாச்சார அணிவகுப்பில் முதலிடத் தையும், சாரண, சாரணிய இயக்க அணிவகுப்பில் இரண்டாம் இடத்தையும், கண்காட்சியில் முதலிடத்தையும், உணவுப்பொருள் கண்காட்சியில் முதலிடத்தையும், உடல்திறன் போட்டிகளில் முதலிடத்தையும், கைவினைப் பொருட்கள் செய்தலில் இரண்டாம் இடத்தையும், வரவேற்பு அணிவகுப்பில் முதலிடத்தையும், கலைநிகழ்ச்சிகளில் முதலிடத்தையும், கூடாரப் பொருட்கள் செய்தலில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிக் கேடயத்தை வென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.எம் மேல்நிலைப் பள்ளி, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, துறைமுக மேல்நிலைப் பள்ளி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி, எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 24 சாரணர்கள், 24 சாரணியர்கள், 11 பொறுப்பாசிரியர்கள் பங்கேற்று போட்டிகளில் இந்த வெற்றிகளை பெற்றனர்.
வெற்றி கேடயத்தை தமிழக சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்க செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பாலிடம் வழங்கி னார்.
வெற்றிபெற்ற சாரண, சாரணியர் களையும், பொறுப்பாசிரியர்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் சாரண, சாரணிய இயக்க மாவட்டத் தலைவர் ஏ.மங்கள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT