சிறந்த பள்ளிக்கான விருது: திண்டுக்கல் தொடக்கப்பள்ளி தேர்வு


சிறந்த பள்ளிக்கான விருது: திண்டுக்கல் தொடக்கப்பள்ளி தேர்வு

திண்டுக்கல்: தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ரத வீதியிலுள்ள தொடக்கப் பள்ளி, பழநி அடிவாரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி, ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என 3 பள்ளிகள் சிறந்த பள்ளிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சிறந்த பள்ளிகளுக்கான தேர்வில்இடம் பிடித்த திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்திபிளாரன்ஸ் இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு ஒழுக்கத்தை முக்கியமாகக் கற்றுத் தருகிறோம். அதனால் மாணவர்கள் அதிகமாக எங்கள்பள்ளியில் சேர்கின்றனர்.கல்விச் செயல்பாடுகள், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் பராமரிப்பு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஜெயந்தி பிளாரன்ஸ்

பள்ளியில் அதிக மணவர்களைச் சேர்த்துள்ளோம். பள்ளியில் அடிப்படைவசதிகள் செய்துள்ளோம். இதற்குதிண்டுக்கல் நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் தொண்டு உள்ளத்துடன் உதவினர். மாணவ, மாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் செய்துகொடுத்துள்ளனர். பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்புக் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி பாடங்களைக் கற்றுத் தருகிறோம். வாழ்க்கைக்குத் தகுந்த கல்வி மற்றும் சூழ்நிலைக்கேற்ப கல்வியை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். முக்கியமாக மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருகிறோம். குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறை செலுத்துகிறோம். கலைநிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சமுதாய விழாக்களைப் பள்ளியில் மாணவர்களுடன் கொண்டாடுகிறோம். இதையறிந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்கின்றனர் என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x