கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான அன்பு இல்லத்திற்கு சென்று. அங்குள்ள முதியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், அன்பு இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். அத்துடன் ஆதரவற்றோரிடம் உடல்நலம் விசாரித்து, அன்பாக பேசினர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டிகள், மாணவிகளுக்கு பதிலுக்கு பதில் கூறும் வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அப்போது மாணவர்களிடம் வேண்டி கேட்டுக்கொண்டனர்.
நன்றாக படித்து பெற்றோர் சொல் கேட்கவேண்டும். வயதான காலத்தில் பெற்றோரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்’’ என மாணவிகளிடம் வேண்டி கேட்டுக் கொண்டதுடன் அவர்களுக்கு ஆசியும் வழங்கியது நெகிழ்வான காட்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஜெயா கலந்துகொண்டார்.
WRITE A COMMENT