சென்னை: "வெற்றிக்கொடி"யில் ஒவ்வொருவெள்ளிக்கிழமையும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில்சர்வீஸ் அதிகாரிகளின் தேர்வு தயாரிப்பு அனுபவங்களை உள்ளடக்கிய தொடர் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) "கிராமத்து அரசு பள்ளியில் தமிழ்வழிக்கல்வி படித்த ஐஐஎஸ்" என்ற தலைப்பிலான தொடரில் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி தலைமையகத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வரும் இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் (ஐஐஎஸ்) அதிகாரியான ராஜதுரை தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இவர் அரசு பள்ளி யில் பிளஸ் 2 வரை தமிழ்வழியில் படித்தவர். மிகச்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது 7-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐஐஎஸ் பணிக்கு தேர்வானார்.
லைக்குகள் ஏராளம்: சாதாரண குடும்பப் பின்னணியும், அரசு பள்ளியில் தமிழ்வழியில் படித்தாலும் கடுமையாக முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கட்டுரை தொடரை பகிர்ந்துள்ளது. இந்த பதிவுக்கு ஏராளமானோர் லைக்குகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
WRITE A COMMENT