திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவக் கல்லூரிகளில் சேரும்மாணவ, மாணவிகளை திருப்பூர்மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பாராட்டினார்.
திருப்பூர் ஜெய்வாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவிகள், கணபதிபாளையம் அரசுமேல்நிலைப் பள்ளியில் 3 மாணவ-மாணவிகள், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவிகள், அய்யங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ, மாணவிகள், கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவர்கள், பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவ, மாணவிகள், பழநியம்மாள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2மாணவிகள், எலையமுத்தூர் எஸ்என்விஅரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி, பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் என மொத்தம் 14 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 29 மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத் ஸ்டெதஸ்கோப் மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கி ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
WRITE A COMMENT