சென்னை: மயிலாப்பூரின் வரலாற்றுச் சிறப்புகளை மையப்படுத்தி 'எங்கள் மயிலாப்பூர்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவிகளுக்கு திமுக எம்பி கனிமொழி கருணாநிதி பரிசுகள் மற்றும் சுழல்கோப்பையை வழங்கினார்.
அன்பின் பாதை அறக்கட்டளை, கேஇஎச் குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு இணைந்து 'எங்கள் மயிலாப்பூர்' என்ற தலைப்பில் மயிலாப்பூரின் கலாச்சாரம், பண்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி பள்ளிகளுக்கான மாபெரும் அறிவுசார் மற்றும் கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பரிசுவழங்கும் விழா எம்ஜிஆர் ஜானகிமகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில், திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சுழல் கோப்பையை வழங்கினார். இவ்விழாவில் மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு, கேஇஎச் குழும நிறுவனத்தின் தலைவர் வசந்தகுமார் வாசுதேவன் மற்றும் அன்பின் பாதை அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
WRITE A COMMENT