திருநெல்வேலி: இயற்கை வழியில் விவசாயம் செய்வது எப்படி? என்பது குறித்து வள்ளியூர் பகுதி விவசாயிகளிடம் உத்தரப்பிரதேச பல்கலைக்கழக மாணவிகள் கேட்டறிந்தனர். அவர்கள் விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நாற்றுகளையும் நட்டினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்கை வழி விவசாயம் குறித்து படிக்கும் மாணவிகள் சினேகா, பிரநிலா, அஜின்சியா ஜோல் ஆகியோர் அனுபவ பாடத்துக்காக வள்ளியூர் வட்டாரம் மகேந்திரகிரியில் பாரம்பரிய விவசாயம் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
பாரம்பரிய இயற்கை விவசாயிகள் சங்க செயலாளர் மகேஸ்வரன் சாகுபடி செய்துள்ள 180 நாள் வயதுள்ள காட்டுயாணம் நெல் குறித்துகேட்டறிந்தனர். கன ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மகாமூலிகைபூச்சி விரட்டி, மகா அக்னிஅஸ்திரம் மற்றும் பலதானிய விதைப்பு குறித்த தொழில்நுட்பங்களையும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
WRITE A COMMENT