சென்னை: விளைநிலத்தில் இருந்து அருகில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு பயிர்களை எடுத்துச் செல்வதற்கான இயந்திரத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொது விவசாயிகள் சங்கம் என்னும் அரசு சாரா நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து விவசாய நிலத்தில் இருந்து விளை பயிர்களை சேகரிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
பொது விவசாயிகள் சங்கத்தின் தலைவரான டி.என்.சிவசுப்பிரமணியனின் நிலம் கரூர்மாவட்டத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் இருக்கிறது. இந்த நிலத்தில் புதிதாக சோதனை முறையில் ஒரு அமைப்பை உருவாக்கி அதைச் சோதனை செய்து வெற்றியும் அடைந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் ஷங்கர் கிருஷ்ணபிள்ளை கூறும்போது, “வரும் காலங்களில் அறுவடைக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் கிடைக்காத சூழல் உருவாகும். இதை போக்கவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
WRITE A COMMENT