திருப்பூர்: சிஏ படிப்பு மற்றும் அதற்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? என்பது குறித்து திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அகில இந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் அக்டோபர் 31-ம் தேதி பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி மேயர்ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்கேஎம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பூர் பட்டய கணக்காளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜன், பள்ளி மாணவர், மாணவியரிடையே பட்டய கணக்கு படிப்பு (சிஏ)தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.
பிளஸ் 2-வுக்கு பிறகு படிக்கும் நான்கரை ஆண்டு கால படிப்பு மற்றும் பட்டம் படித்த பிறகு படிக்கும் 3 ஆண்டு கால பட்டய கணக்கு படிப்புகள் தொடர்பாக விளக்கினார். மேலும் பட்டய கணக்கு படிப்பில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கேஎஸ்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பழநியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் பட்டய கணக்காளர் சங்கத்தின் செயலாளர் சி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
WRITE A COMMENT