கோவை | மாணவர்களின் நடத்தையில் மாற்றம் இருந்தால் ஆசிரியர்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்


கோவை | மாணவர்களின் நடத்தையில் மாற்றம் இருந்தால் ஆசிரியர்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

கோவை: வகுப்பில் மாணவர்களின் நடத்தையில் மாற்றம் இருந்தால், அதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் செயல்படும் இப்பள்ளியின் சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை, எண்ணும் எழுத்தும் திட்ட அறை, கல்வி பயிலும் அறை, கணினி அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வருங்கால சமுதாயத்தை கட்டமைக்க கூடியவர்கள் ஆசிரியர்கள். பாடம் நடத்தும்போது மாணவர்கள் முழுமையாக கவனிக்கிறார்களா என்பதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். ஏதாவது மாணவர்கள் பாடத்தை கவனிக்காமல், நடத்தையில் மாற்றம் இருந்தால் அதைப்பற்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களின் நலனில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இரா. பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x