உதகை | நீலகிரி பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி


உதகை | நீலகிரி பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி
நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்ற தலைமை பண்பு பயிற்சியில் ஆர்வத்தோடு பங்கேற்ற பழங்குடியின மாணவ, மாணவிகள்.

உதகை: பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஒருநாள் தலைமைப்பண்பு பயிற்சி முகாம், நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி கேத்தி வேலி சங்கம் ஏற்பாடு செய்த இப்பயிற்சி வகுப்பை அச்சங்கத்தின் தலைவர் ஐவிஸ் பாபு தொடங்கி வைத்தார். செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, தலைமை பண்புகளை மேம்படுத்துவது, பேச்சாற்றல் திறமையை வளர்த்துக்கொள்வது, குழுவை வழிநடத்துவது போன்ற தலைப்புகளில் சங்க உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், ரமேஷ் குமார், கலைச்செல்வன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் பொக்காபுரம் உண்டு உறைவிடப்பள்ளி, கார்குடிஉண்டு உறைவிடப்பள்ளி, வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 பழங்குடியின மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சி முகாம்மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்த தாக அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x