விருதுநகர்: பள்ளிக் கல்வித் துறை சார்பில்விருதுநகர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் கல்லூரி செயலாளர் சர்ப்பராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டிகள் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளாக மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளின் தொடக்க நாளான புதன்கிழமை அன்று மாணவர்களுக்கான 100 மீ, 200 மீ, 400 மீ,800 மீ, 1,500 மீ, 3,000 மீ ஓட்டப் போட்டிகள், தடையோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 300-க்கும்மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியின் 2-ம் நாளான நேற்றுபிற்பகல் மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் நடைபெற்றன இப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
WRITE A COMMENT