சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்ற பழங்குடியின மக்கள்


சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்ற பழங்குடியின மக்கள்
பகல்கோடுமந்துக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர்கள் அளித்து வரவேற்ற தோடா பழங்குடியினர்.

உதகை: உதகை அருகே பகல்கோடுமந்து சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு, உதகை வந்த சுற்றுலா பயணிகளுக்கு பழங்குடியின மக்கள் மலர்கள் வழங்கி வரவேற்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் தேதிசர்வதேச சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, உதகை அருகே பகல்கோடுமந்து சுற்றுலா தலத்துக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை தோடா பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். அவர்களுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டுக் குழுவினர் பங்கேற்றனர். உதகையை அடுத்த பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஒன்பது பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x