உடுமலையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியம்


உடுமலையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியம்
ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் நடைபெற்ற ஓசோன் தின விழிப்புணர்வு போட்டியில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள்.
உடுமலை:

கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ்ரோட்டரி சங்கம் சார்பில், உடுமலையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையும்நிகழ்ச்சி நடைபெற்றது. தேஜஸ் ரோட்டரி தலைவர் சத்யம் பாபு தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன், கல்வியாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.75 அடி நீள அளவில் மாணவர்கள் 75 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஓசோன் பாதுகாப்பு, புவி வெப்பமாதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். வாழ்க்கையின் அன்றாட நிகழ்வில் உள்ளஅறிவியலை அதன் கண்ணோட்டத் துடன் அணுகுவதை விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர்.

கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x