Published : 13 Jul 2022 06:38 AM
Last Updated : 13 Jul 2022 06:38 AM
செங்கல்பட்டு: தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர் தனித்திறமையை ஊக்குவிக்கும் நின்னைக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுவது மட்டுமின்றி, யூடியூப் சேனலையும் தொடங்கி அசத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள நின்னைக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 1 முதல்,
8-ம் வகுப்பு வரை, 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் விதமாக,மாதம் இரண்டு வெள்ளிக்கிழமை களில், மாலை, 1 மணி நேரம், தொடக்கநிலை வகுப்புகளுக்கு பாலர் சபையும், நடுநிலை மாணவர்களுக்கு, கணிதம், அறிவியல், இலக்கிய மன்றங்களும் நடத்தப்படுகின்றன. லும், பள்ளிக்கென தனியாக, 'PUMS NINNAIKARAI' என்ற பெயரில் தனி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு, மாணவர், பெற்றோர், ஊர்க்கள் அனைவரும் பள்ளி செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர் கூறும்போது, "நாங்கள் வேலை நிமித்தமாக குழந்தைகளை சரிவர கவனிப்பதில் சிரமம் உள்ளது. குழந்தைகளின் தனித்திறமைகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஆனால், பள்ளி ர்வாகம் குழந்தைகளின் தனித்
திறமைகளை கண்டு அவற்றை வெளிப்படுத்த உதவுவதோடு, படம் எடுத்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு தனித்திறமைகள் உள்ளதா என்பதை காணும் போது, உள்ளபடியே மனம் மகிழ்கிறது.
தனியார் பள்ளிக்கு ஈடாக இந்த அரசுப்பள்ளி செயல்படுவது மிகப் பெருமையாக இருக்கிறது" என்றனர். ள்ளியின் தலைமை ஆசிரியர் சீனி. சந்திரசேகரன் கூறியதாவது: லர் சபை என்பது சிறுவர் பருவத்திலேயே நல்ல மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள், படிப்பில் ஆர்வம் ள்ளிட்ட திறமைகளை கண்டறிவதோடு அவற்றை வளர செய்து, கடவுள் பக்தியிலும், பெற்றோர் வழிகாட்டுதலிலும் நடக்க வைத்தலே ஆகும்.
மேலும், கணிதம், அறிவியல், இலக்கிய மன்ற நிகழ்வுகளில் மாணவரின் கவிதை எழுதுதல், நாடகம் நடித்தல், பேச்சாற்றல், பட்டிமன்றம், வரைதல் போன்ற திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு ஆகியோர் முயற்சியால், பள்ளிக்கு ௭ன தனி யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு, மாணவர், பெற்றோர், ஊர்மக்கள் அனைவரும் பள்ளி செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்பிற்கும் பெற்றோர்களை இணைத்து வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தினசரி பாடங்கள், ட்டுப் பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தகவல் அனுப்புகிறோம். வ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT