Published : 03 Feb 2020 09:36 AM
Last Updated : 03 Feb 2020 09:36 AM

சீர்காழி பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தின விழா

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற தாத்தா, பாட்டிகள் தின விழாவில் பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் கலைநிகழ்ச்சி.

சீர்காழி

நாகை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக்குலேசன் பள்ளியில், தாத்தா, பாட்டிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில், பாட்டிகளுக்கு கோலப்போட்டியும், தாத்தாக்களுக்கு அம்பு எய்தல் போட்டியும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மனித சங்கிலி

பின்னர், ‘உங்களுக்குத் தலை வணங்குகிறோம், எங்களை வாழ்த்துங்கள்' எனத் தெரிவிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி நடைபெற்றது. அதன்பின், தாத்தா, பாட்டிகளுக்கு பேரன்,பேத்திகளால் பாதபூஜை நடத்தப்பட்டது.

இவ்விழாவில், ஓய்வு பெற்ற ரயில்வேஅதிகாரி சு.ஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாகபள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு வரவேற்றார்.

நிறைவாக, பள்ளியின் முதல்வர் தங்கதுரை நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணைமுதல்வர்கள் மாதவன், கிரிஜாபாய், உஷா, ஜெயஸ்ரீ மற்றும் ஆசிரியர்கள் வித்யா, குபேந்திரன், தமிழரசன், தமிழ்வாணன், துரைமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x