Published : 24 Jan 2020 09:56 AM
Last Updated : 24 Jan 2020 09:56 AM

தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர், எஸ்பி பாராட்டு

தேசிய அளவிலான பூப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன்.

ஈரோடு

தேசிய அளவிலான பூப்பந்து மற்றும்போல்வால்ட் போட்டிகளில் சாதனைபடைத்த ஈரோடு மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோர் பாராட்டினர்.

தேசிய அளவிலான பூப்பந்து போட்டிஆந்திர மாநிலம் செப்ரோலுவில், ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக அணிக்கு, ஈரோடு தாமரை மெட்ரிக் பள்ளி மாணவி ஜெ.பசும்பொன் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அணியை வழிநடத்தினார்.

தமிழக அணியில் இதே பள்ளியைச்சேர்ந்த எஸ்.காவியாஞ்சலி, பி.மைதிலிஆகியோர் இடம் பெற்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக அணி, இறுதிப்போட்டியில் கேரள அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

தேசிய தடகள போட்டி

இதேபோல், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் தேசிய அளவிலானதடகளப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்ற இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் எல்.கமல், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். 64 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மாணவர் எல்.கமல் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தேசிய அளவிலான பூப்பந்து மற்றும்தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் பி.பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் பி.சுரேஷ்குமார் ஆகியோரை,ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோர் பாராட்டினர்.

இதேபோல் பள்ளியின் தாளாளர் எஸ்.ராஜா, செயலாளர் ஆர்.ஆனந்த், பள்ளி முதல்வர் ஆர்.அசோக் மற்ற சக ஆசிரியர்கள் ஆகியோரும் அம்மாணவர்களை வாழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x