Published : 21 Jan 2020 08:58 AM
Last Updated : 21 Jan 2020 08:58 AM
தொடக்கக் கல்வித்துறையில் 97 வட்டார கல்வி அலுவலர் (பிஇஓ) காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு ஜனவரி 9-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் விண்ணப்பிப்பதற் கான கடைசி நாள் ஜன. 21-வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பிஇஓ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
பிஎட் முடித்த பிஏ, பிஎஸ்சி பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.trb.tn.nic.in) பயன்படுத்தி இன்று மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம். ஆன்லைன்வழி தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT