5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை


5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
கோவை:

இந்திய மாணவர் சங்க கூட்டம், கோவையை அடுத்த வடசித்தூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அசாருதீன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கவி பாரதி வரவேற்றார். மாவட்டச் செயலர் தினேஷ்ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் ஆகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், 'தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வி குறித்து பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மேலும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

தொடர்ந்து பொள்ளாச்சி வட்டத் தலைவராக சந்தியா, செயலராக ரமேஷ் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x