அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் கல்வியைப் பயிற்றுவிக்கும் வகையில், சேலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்1 லட்சத்து 15 ஆயிரத்து 363 ஆசிரியர்களுக்கு, ஆங்கில பேச்சுத் திறன் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 4,500 பேருக்கு ஆங்கில பேச்சுத் திறன் போதித்தல் குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, ஆசிரியர் பயிற்றுநர் களுக்கு சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் செல்வம் தொடங்கி வைத்தார். ஆசிரியர் கல்வி நிறுவன பேராசிரியர்கள் வெங்கடேசன், சுரேஷ்பாபு, அசோகன் ஆகியோர் ஆங்கில பேச்சுத் திறன் போதித்தல் குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சிவகுப்பில் 63 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் கல்வி போதித்தல் பயிற்சி அளிப்பார்கள். அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் மான்விழி, கோவிந்த பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
WRITE A COMMENT