தாம்பரத்தை அடுத்த மறைமலை நகரில் மாசு கட்டுப்பாட்டின் அவசி யத்தை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் ஓட்டத் தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மறைமலை நகர் அருகேயுள்ள வடமேல்பாக்கம் லயோலா அகாடமி பள்ளி சார்பில் மாசு கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்த்தவும், மாசில்லாஉலகம் படைப்போம், மனித உயிர்களை காப்போம் என்ற விழிப்புணர்வு வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை மறைமலை நகரில் நடைபெற்றது.
மறைமலை நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.வாசுதேவன் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மறைமலை நகர் காவல் ஆய்வாளர் செல்வம், லயோலாஅகாடமி தாளாளர் அருட்திரு லியோஏ. தாகூர், செயின்ட் ஜோசப்மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி யின் முதல்வர் அருட்சகோதரி மின்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவி கள், 5 கி.மீ. தூரம் ஓடினர். அவர் கள் "இயற்கையை நேசிப்போம், இயற்கையை காப்போம், பூமித்தாயை நேசிப்போம், நம்மையும் நம் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்போம்" என கோஷமிட்டபடியே ஓட்டத்தில் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
WRITE A COMMENT