செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக் கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதியுமான மாரிக்காளை தலைமை வகித்தார். அரசு குற்றத்துறை வழக்கறிஞர் பரணிந்தர், காவல் சார்பு ஆய்வாளர்மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தனர். தலைமை ஆசிரியர்இவாஞ்சலின் டேவிட் வரவேற்றார்.
மூத்த வழக்கறிஞர் ஆதிபாலசுப்பிர மணியன் கருத்துரை வழங்கினார்.
‘காவலன்’ செயலிகாவல் சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி, ‘காவலன்’ செயலி குறித்து மாணவிகளிடம் விளக்கினார். தொடர்ந்து நீதிபதி மாரிக்காளை, மாணவிகளுக்கு சட்டத்தின் பயன்கள்மற்றும் சட்டவிதிகள் குறித்து விளக்கினார். மாணவிகள் ஆஸ்மீ, பெமிலா, மகேஸ்வரி ஆகியோர் சட்டங்கள் குறித்த சந்தேகங்களை நீதிபதியிடம் கேட்டு ஆலோசனை பெற்றனர்.
நிறைவாக, உதவி தலைமை ஆசிரியை பிச்சம்மாள் நன்றிகூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழுத் தன்னார்வப் பணியாளர் ஜெயராமசுப்பிர மணியன் உள்ளிட்டோர் செய்திருந் தனர்.
WRITE A COMMENT