விளாத்திகுளம் பள்ளியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி


விளாத்திகுளம் பள்ளியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் சாரோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் விதைப் பந்துகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி வெல்விஷர் தலைமை வகித்தார். மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு விதைப்பந்துகளை வழங்கிப் பேசினார். மேலும், மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வுப் பேரணியை பள்ளி வளாகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார், மதுரை சாலை, வேம்பார் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக சென்ற இந்த பேரணி, ஆற்றுப்பாலத்தில் முடிவடைந்தது.

மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கோஷங்கள் முழங்கியவாறு மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் நளினி வெல்விஷர், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி வெல்விஷர்,முதல்வர் சம்பத் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x