சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு முகாம், கைவினைப் பொருள் கண்காட்சி


சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு முகாம், கைவினைப் பொருள் கண்காட்சி
கோவை:

தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில், சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு முகாம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி கோவையில் நடைபெற்றது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில், சிறப்பு பயிற்சி மைய மாணவர் களுக்கான திறன் வளர்ப்பு முகாம்மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி கோவை காவலர் பயிற்சிப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மைய பயிற்றுநர் கே.கலைவாணி வரவேற்றார். காவலர்பயிற்சிப் பள்ளியின் முதல்வரும்,கூடுதல் காவல் கண்காணிப்பாள ருமான ஆர்.சுபாஷினி கண்காட்சியைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார். தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், எழுத்தாளர் ரெங்கலெ. வள்ளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறைத்தலைவர் ஜெனிட்டா ரோஸ்லின் பேசியதாவது: “சிறப்புப் பயிற்சி மையங்களைச் சேர்ந்த குழந்தைகள் உருவாக்கிய கைவினைப்பொருட்கள், மனதைக் கவரும் வகையில் உள்ளன. இவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல், பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

இவர்களுக்கு கல்வி அளிக்கக் கூடிய சிறப்பு மைய ஆசிரியர்கள், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் மற்றும்வழி நடத்துபவர்கள், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்று வதே, இக்குழந்தைகளின் மேம்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும். பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழ் மொழியை நேசித்து, சிறப்பாக படிப்பது பாராட்டுக்குரியது.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிப்பது சமூக மாற்றத்தை உருவாக்கும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் உதவிகள், இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கே.லலிதா ஜெகன் குழந்தைகளுக்கு கதை கூறினார். பின்னர் சிறப்பு பயிற்சி மையக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஏ.வெங்கடேசன், அரிமா சங்க நிர்வாகி என்.சண்முகசுந்தரம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.இ. பீஜி அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x