மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், வெள்ளக்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின், ஒருங்கிணைந்த பள்ளிகல்வித் திட்டம் சார்பில், மாவட்டஅளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தடகளப்போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெள்ளக்கிணறு வி.சி.வி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விவரம்:17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்10-ம் வகுப்பு மாணவர் விக்னேஷ்வரன் 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம், மும்முறை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் மூன்றாமிடம் பிடித்தார்.
மனோஜ்குமார் உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் பிரிவுகளில் முதலிடம், 1,500 மீ. ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்றார். 9-ம் வகுப்பு மாணவர் லோகேஸ்வரன் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்12-ம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் 400 மீ. மற்றும் தொடர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டாமிடம், நீளம்தாண்டுதல், 100 மீ. ஓட்டப்பந்தயங்களில் மூன்றாமிடம் பெற்றார்.
முருகேஷ் மும்முறை தாண்டுதல், தொடர் ஓட்டபந்தயங்களில் இரண்டாமிடமும், கணேஷ்பிரபு உயரம்தாண்டுதலில் முதலிடம், தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம், வட்டு எறிதல் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தார்.
11-ம் வகுப்பு மாணவர் விவின் உயரம் தாண்டுதல் பிரிவிலும், பிரகதீஸ்வரபாண்டியன் தொடர் ஓட்டப்பந்தயத்திலும் இரண்டாமிடம் பெற்றனர்.
17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் 10-ம் வகுப்பு மாணவி அகல்யா 200 மீ. ஓட்டப்பந்தயம், மும்முறை தாண்டுதலில் முதலிடமும், வட்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும் பிடித்தார்.
சுகா பாத்திமா நீளம் தாண்டுதலில் முதலிடமும், தொடர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும் பெற்றார். ரோஸினி தொடர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்றார்.
9-ம் வகுப்பு மாணவி டயானா ஜெனிபர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், 400 மீ. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றார்.
19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீ துர்கா தேவி 1500 மீ., 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார். விக்னேஷ்வரி உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம் பிடித்தார்.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 13 புள்ளிகள் பெற்ற 10-ம் வகுப்பு மாணவி அகல்யா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 10 புள்ளிகள் பெற்ற12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீ துர்காதேவி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை பரிமளா, உடற்கல்வி இயக்குநர் முருகேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், பத்மாவதி ஆகியோர் பாராட்டினர்.
WRITE A COMMENT