அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி


அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி
கோவை:

ஆனைக்கட்டி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி, அறிவுத்திறன் வளர்ச்சி சிறப்பு மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையொட்டி 9-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், இம் மையம் செயல்பட உள்ளது.

இதன்படி நீட், குரூப்-1,குரூப்-2, குரூப்-4 ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படஉள்ளது. இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரையிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘போட்டித் தேர்வுகாக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 3-ம் தேதிக்குள் கோவை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x