கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாணவர்களுக்கு புதுவை அமைச்சர் அறிவுரை


கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாணவர்களுக்கு புதுவை அமைச்சர் அறிவுரை
காரைக்கால்:

கல்வியை மேம்படுத்த அரசு மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுஅருகே தேனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கமலக்கண்ணன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அமைச்சர் பேசியது:

கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே ஒவ்வொரு மாணவரும் தமது குடும்பச் சூழல், பெற்றோரின் நிலை, தமது எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து சிந்தித்து கல்வி பயிலவேண்டும்.

ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் நலனுக்காக பணியாற்றுகின்றனர். கல்வி மேம்பாட்டுக்காக அரசு, ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தகுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அதிகாரி அ.அல்லி, மேல்நிலைக் கல்விதுணை இயக்குநர் கே.கோவிந்த ராஜன், திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன், பள்ளி துணை முதல்வர் புருஷோத்தமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x