மாநில பேண்ட் வாத்திய இசை போட்டியில் கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம்


மாநில பேண்ட் வாத்திய இசை போட்டியில் கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம்
கோவை:

பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பேண்ட் வாத்திய இசைப்போட்டி, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம்-டிஆர்பி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 45 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் கோவை மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட கணபதி சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் அணி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இதன்மூலம் டிசம்பரில் தேசிய அளவில் நடைபெறும் பேண்டு வாத்திய இசைப் போட்டிக்கு, இப்பள்ளிமாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். பேண்டு வாத்திய இசை அணி மற்றும் பேண்டு வாத்திய பயிற்றுநர் ராஜேந்திரன் ஆகியோரை பள்ளி முதல்வர் ஹெச்.ஹாஜா ஷெரீப் வாழ்த்தினார்

FOLLOW US

WRITE A COMMENT

x