52-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் சிந்தனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை,கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் படைப்பாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கோவை சி.எஸ்.ஐ.மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே' என்ற தலைப்பில் நடைபெற்ற, கோவைமாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் 6-8 வகுப்பு பிரிவில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ர.விமல் முதல் பரிசை பெற்று ‘இளம் படைப்பாளர்' விருது பெற்றார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் இம்மாணவனுக்கு கோவைமுதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் பரிசு வழங்கிப் பாராட்டினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு, ரமேஷ் பாபு, நூலகர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியை பத்திரம்மாள், வழிகாட்டி ஆசிரியர் திருமுருகன் ஆகியோர் மாணவரைப் பாராட்டினர்.
WRITE A COMMENT