மதுரை
வாடிப்பட்டி தாய் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தாய் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் 7-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் இயக்குநர்கள் சுப்ரியா பாலாஜி, பாரதி பிரியா கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபரும், கல்வியாளருமான சுபா பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகளும், கலைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு சிறப்பு விருந்தினர் சுபா பரிசுகளை வழங்கினார்.
அவர் பேசும்போது, "இப்பள்ளி நிர்வாகம் குறைந்த கட்டணத்தில் கல்விச் சேவை புரிந்து வருவது பாராட்டுக்குரியது. இதன் மூலம் வாடிப்பட்டியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
மேலும், பள்ளி நிர்வாகம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு அடுத்த முயற்சியாக கலை, அறிவியல் கல்லூரி ஒன்றை விரைவில் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.
WRITE A COMMENT