மாவட்ட துளிர் விநாடி வினா போட்டிகள்: 8 பள்ளிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு


மாவட்ட துளிர் விநாடி வினா போட்டிகள்: 8 பள்ளிகள் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு

திருச்சி

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலும் 1989-ம்ஆண்டு முதல் துளிர் விநாடி வினா போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. அந்தவகையில், திருச்சி மாவட்ட அளவிலான துளிர் விநாடி வினா போட்டிகள் திருச்சி ஜோசப் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரையாண்டு பாடத் திட்டத்தின் அடிப்படையில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பிரிவுகளிலிருந்தும் மற்றும் துளிர் இதழின் வானவியல், சுற்றுச்சூழல் - பல்லுயிர் பெருக்கம்,கணித அறிவியல், அன்றாட வாழ்வில் அறிவியல் பகுதியிலிருந்தும் வினாக்கள் இடம் பெற்றன.

மொத்தம் 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்தில் 38 பள்ளிகளில் இருந்து 256 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

4, 5-ம் வகுப்பு பிரிவில் எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி, கே.கே.நகர் பெரியார் மெட்ரிக் பள்ளி, 6, 7, 8-ம் வகுப்பு பிரிவில் எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி, சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் பள்ளி, 9, 10-ம் வகுப்பு பிரிவில் எஸ்ஆர்வி சிபிஎஸ்இ பள்ளி, மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பிரிவில் தூய வளனார் மேல்நிலைப் பள்ளி, எஸ்பிஐஓஏ மெட்ரிக் பள்ளி முறையே முதல் இரு இடங்களைப் பெற்றன.

இந்த 8 பள்ளிகளும் நவ.30-ம் தேதி திருச்சி காவேரி கல்லூரியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற் றன.

FOLLOW US

WRITE A COMMENT

x