கரூர்
கரூரில் 300 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் வழங்கினார்.
52-வது தேசிய நூலக வாரவிழாவையொட்டி கரூர் மாவட்ட பொது நூலக இயக்ககம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) அ.பொ.சிவகுமார் தலைமை தாங்கி, புதியநூலக உறுப்பினர் சேர்க்கை அட்டையை 300 மாணவ, மாணவிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
அவர் பேசும்போது, ‘‘படிப்பதால் கல்வித் தரம் உயரும். வாசிப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். நமது லட்சியங்கள் நிறைவேற நூல் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வேண்டும்’’ என்றார்.
வாசகர் வட்ட நெறியாளர் அ.ச.சேதுபதி வாழ்த்திப் பேசினார். முதல்நிலை நூலகர் ப.மணிமேகலை வரவேற்றார். தமிழாசிரியர் கே.ஜி.சாருமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட மைய நூலக நல்நூலகர் செ.செ.சிவக்குமார் ஒருங்கிணைத்தார். இனாம் கரூர் கிளை நூலக நல்நூலகர் ம.மோகனசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செட்டிநாடு வித்யா மந்திர், மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
WRITE A COMMENT