கோவில்பட்டி
விருதுநகரில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் கள் சிறப்பிடம் பிடித்தனர்.
மாநில அளவிலான கராத்தே “சண்டை பயிற்சி” போட்டிகள் விருதுநகரில் நடந்தன. இதில் 7 மாவட்டங்களில் இருந்து 350 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 7-ம் வகுப்பு மாணவர்கள் சிவா, ராகுல், மாணவி சரண்யா, ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவர் அல்சுஹேல், 5-ம் வகுப்பு மாணவி லக்சிதா,4-ம் வகுப்பு மாணவர் காவியகுரு ஆகியோர் 2-ம் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவி களை கோவில்பட்டி எம்.எம். வித் யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் முத்துலட்சுமி, துணை முதல்வர் சுதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
WRITE A COMMENT