அரியலூர்
அரியலூர் அரசு சிமென்ட் ஆலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் அரசு சிமென்ட் ஆலை மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், டிஸைன் திங்கிங் (Design Thinking) என்ற தலைப்பில் ஊக்கப்படுத்துதல் வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை எஸ்என்எஸ் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் ரா.ராஜசேகரன் கலந்துகொண்டு, மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி, என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன? அந்தத் தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராவது? என்பது குறித்து விளக்கினார். மேலும், மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார். இதில், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் ஆர்.சங்கர்கணேஷ் வரவேற்றுப் பேசினார்.
WRITE A COMMENT