ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தர கோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி ஹாக்கி அணி, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெற்றன.
இதில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன.
ஹாக்கி போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பிரிவில் திருஉத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றனர். இந்த இரண்டு அணிகளும் நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சேலத்தில் நடைபெற உள்ள மாநில ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளன. விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை தொண்டி இஸ்லாமியா மாடல் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
கல்வி அதிகாரிகள் பாராட்டுமாநில ஹாக்கி போட்டிக்குத் தேர்வு பெற்ற திருஉத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், மகாலிங்கம் ஆகியோரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.கர்ணன், உதவி தலைமை ஆசிரியை ச.நிவேதிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
WRITE A COMMENT