கோவை
கோவை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், மூலத்துறை அரசு பள்ளி மாணவர் ஆர்.விமல் இரண்டாம் பரிசு பெற்றார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள புதிய வெளிச்சம் அறக்கட்டளையுடன், பெரியநாயக்கன்பாளையம் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டி, பயனீர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆர்.விமல், 'மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியின் பரிசளிப்பு விழாபிரஸ் காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், எஸ்.வி.டி. பசுமை அறக்கட்டளை நிர்வாகி சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசுகள் வழங்கினார்.
பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் பரிசு பெற்ற மாணவர் விமலுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பத்ரம்மாள், வழிகாட்டி ஆசிரியர் திருமுருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
WRITE A COMMENT