நரசிங்கக்கூட்டம் தொடக்கப் பள்ளிக்கு விருது


நரசிங்கக்கூட்டம் தொடக்கப் பள்ளிக்கு விருது
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய கல்வி தின விழாவில், சிறந்த பள்ளிக்கான விருது நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அவ்விருதை பெற்றுக்கொண்ட பள்ளிக் குழந்தைகள்

தேசிய கல்வி தினத்தையொட்டி நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள் தேசிய கல்வி தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமையுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு நவாஸ்கனி எம்.பி. சார்பில் கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கலந்து கொண்டார்.

சிறந்த பள்ளிக்கான விருது கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

கல்வி ரத்னா விருதை தலைமை ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் பொ.அய்யப்பன் ஆகியோர் மாணவர்களுடன் சென்று பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x