Published : 18 Nov 2019 11:47 AM
Last Updated : 18 Nov 2019 11:47 AM
பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் தாய் ஒன்றியத்துக்கு மாறுதல் வழங்கலாம் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவ.11-ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில்இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கஉள்ளது.
அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் சேதுராமவர்மா அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் நீதிமன்ற உத்தரவின்படி கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல்பெற்ற ஆசிரியர்களில் தகுதியானவர்களை புதிய பணியிடத்தில் சேர அனுமதிக்க வேண்டும்.
இதேபோல், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள காலியிடங்களை பதவி உயர்வு மூலம் தகுதியானவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். பணி நிரவல் மூலம் பிற ஒன்றியங்களுக்கு மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்பளித்து தாய்ஒன்றியத்துக்கு மாறுதல் வழங்கலாம்.
இதுதவிர மாணவர்கள் இல்லாததொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை ஒன்றியத்துக்குள் நிர்வாக மாறுதல் செய்ய வேண்டும். மேலும்,அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மறுநாள் பணியில் சேர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT