கோவை
ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
தன்னார்வ அமைப்பான ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி சார்பில், கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா நடைபெற்றது. கவர்னர் குழு பிரதிநிதி எஸ்.முத்துகுமார் தலைமை வகித்தார். ரோட்டரி கேலக்ஸி சங்கத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
சர்வம் இ.என்.டி. மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சரவணக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து ‘வானமே எல்லை’ என்ற தலைப்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்? எப்படி படிக்க வேண்டும்? அப்படிப்புகளை ஏன் படிக்க வேண்டும்? என்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு அனைத்து மேற்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், நுழைவுத்தேர்வு விவரம், தேர்வு முறை அடங்கிய கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னாள் தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
WRITE A COMMENT