திருச்சி
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கணித கருத்தரங்கில் 2-ம் இடம் பெற்ற திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவரை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறைசார்பில் கரூர் வெண்ணெய்மலைபகுதியில் உள்ள சேரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில்மாநில அளவிலான 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியக்கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கு நடைபெற்றது. இதில், திருச்சி புனித வளனார்கல்லூரி மேல் நிலைப்பள்ளிபிளஸ் 2 மாணவர் டி.தன்ராஜ், தனிமவரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் வகைப்பாட்டில் கணிதத்தின் பங்கு என்ற கருத்தரங்கில் பங்கேற்று மாநில அளவில் 2-ம் பரிசு பெற்றார். இம்மாணவருக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி பரிசு வழங்கி பாராட்டினார்.
மாநில அளவில் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவர் தன்ராஜை பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜெயராஜ் இலங்கேஸ்வரன், தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி, உதவிதலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ், கூடுதல் உதவித் தலைமைஆசிரியர் ஜெயராஜ், வேதியியல் ஆசிரியர் எம்.எட்வின் அலெக்ஸாண்டர், அறிவியல் ஆசிரியர் ஜான்சன் ஆகியோர் பாராட்டினர்.
WRITE A COMMENT