விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி


விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி

விருதுநகர்

அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி அளவில் தனித்திறனை வளர்ப்பதற்காக ஒருங்கிணந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் திறனாய்வு போட்டிகள் (கட்டுரை எழுதுதல், விவாத மேடை) நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்றனர். கல்வி மாலட்ட அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள் விருதுநகர் வித்யா கல்வியியல் கல்லூரியில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழாசிரியர்கள் போட்டிக்கு நடுவர்களாகச் செயல்பட்டனர்.

கட்டுரைப் போட்டியில் உடையனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிமாணவி எம்.சுவேதா முதல் இடத்தையும் முத்தால்நாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவி ஜி.மாரிச்செல்வி 2-ம் இடத்தையும் பிடித்தனர். விவாத மேடை போட்டியில் முத்துராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முத்துச்செல்வி, ஆர். விஜயலட்சுமி ஆகியோர் முதலிடத்தையும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஜெ.ஜாஸ்மின் ரகார்த்தனா, பி.தேவியம்மன் ஆகியோர் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு ரூ1000, 2-ம் இடம் பெற்ற மாணவிகளுக்கு ரூ.500 வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சுபாஷினி பாராட்டு தெரிவித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கனகலட்சுமி, தங்கப்பாண்டி, கருணைதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x