சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு: மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு: மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை

சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட, மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை முதன்மை கல்வி அதிகாரி ஏ.அனிதா பரிசுகள் வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்ஷா அபியான்-எஸ்எஸ்ஏ) சார்பில் தூய்மை பாரதம் தூய்மை பள்ளி இயக்கத்தின் கீழ் மாணவர்களுக்கு சுத்தம்,சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் ஓவியம், கட்டுரை, கடிதம்எழுதுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்டபோட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், கலா உத்சவ் போட்டிகளில் (கருவி இசை, நடனம், வாய்ப்பாட்டுஇசை, ஓவியம்) வெற்றி பெற்றவர்களுக்கும் மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா எஸ்எஸ்ஏசென்னை மாவட்ட திட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏ.அனிதா, எஸ்எஸ்ஏ உதவி திட்ட அலுவலர் ஏ.டி.காமராஜ் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x