மாநில ஐவர் கால்பந்து போட்டியில் கோவை பள்ளி முதலிடம்


மாநில ஐவர் கால்பந்து போட்டியில் கோவை பள்ளி முதலிடம்

கோவை

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், கோவை மணி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

பள்ளி மாணவர்களுக்கான மாநிலஅளவிலான ஐவர் கால்பந்து போட்டி, போத்தனூரில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருச்சி, கேரளா ஆகிய இடங்களைச் சேர்ந்த 96 அணிகள் பங்கேற்று விளையாடின. வெற்றி பெற்ற அணிகள் விவரம்:13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் பிரைட் புட்பால் கிளப் அணி, ஒபிசி புட்பால் கிளப் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. மாணவிகள் பிரிவில் மணி மேல்நிலைப்பள்ளி, மைக்கேல் ஜோப் பள்ளி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் சேலம் அம்மா புட்பால் கிளப் அணி, கோவை கார்மல்கார்டன் பள்ளி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. மாணவிகள் பிரிவில் மைக்கேல் ஜோப்பள்ளி அணி, மணி மேல்நிலைப்பள்ளி அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில் ராஜேந்திரா பள்ளி அணி, கார்மல் கார்டன் பள்ளி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. மாணவியர் பிரிவில் மைக்கேல் ஜோப் பள்ளி அணி, மணி மேல்நிலைப்பள்ளி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

WRITE A COMMENT

x