பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 250 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சர்மிளா,17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.35 மீட்டர் தூரமும், தட்டு எறிதல் போட்டியில் 28.45 மீட்டர் தூரமும், ஈட்டி எறிதல் போட்டியில் 26.45 மீட்டர் தூரமும் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.
இம்மாணவி திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தாளாளர் சி.ஏ.சாதிக் பாட்சா, தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் பாராட்டினர்.
WRITE A COMMENT