மாநில ஐவர் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற வத்தலகுண்டு மாணவர்கள்


மாநில ஐவர் கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற வத்தலகுண்டு மாணவர்கள்

ஈரோடு

ஈரோடு வித்யாதிரி வித்யாலயா பள்ளியில் மாநில பள்ளி மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி கால்பந்து வீரர்களும் கலந்து கொண்டனர்.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வத்தலகுண்டு அன்னைவேளாங்கண்ணி அணி, ஈரோடு வித்யாதிரி வித்யாலயா பள்ளி அணியை 5:1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி அணிஇரண்டாம் இடம் பெற்றது. கோப்பையை வென்ற மாணவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் சேவியர் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அற்புதசாமி முன்னிலை வகித்தார். கோப்பையை வென்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துப்பாண்டி, அருண்சாம்ராஜ், ராஜலட்சுமி ஆகியோருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x