திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 6 தங்கம்


திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி: ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 6 தங்கம்

திருச்சி

திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான பாரதியார் பிறந்த தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றன.

இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிஅணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது. இதேபோல 17 வயதுக்குட்பட்டோருக்கான டேக்வாண்டோ போட்டியில்3 பேர் முதலிடம் பெற்று தங்கம்பெற்றுள்ளனர். 17 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் ஒரு தங்கமும், செஸ் போட்டியில் ஒரு தங்கமும் என மொத்தம் 6 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்து, டேக்வாண்டோ, சிலம்பம், செஸ்ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றதன் மூலம் மாநில அளவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில போட்டியில் பங்கேற்க ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், 17 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில் என்.குகன் என்ற மாணவர் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் கே.வெங்கடேஷ், உடற்கல்வி இயக்குநர் ஆர்.சேதுமணிமாறன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x