மாநில தடகள போட்டிக்கு பேரளம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


மாநில தடகள போட்டிக்கு பேரளம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற, தடகளப் போட்டி மற்றும் எறிபந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றதன் மூலம், பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதலில் மாணவர் வெங்கடேசன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல, நீளம் தாண்டுதலில் மாணவர் டி.விஷ்ணு, ஈட்டி எறிதலில் மாணவி சுருதிஹாசன் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். உயரம் தாண்டுதலில் மாணவர் ரவிசுப்ரமணியன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். எறிபந்து போட்டியில் மாணவர் சேவாக் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளிக் கல்வித்துறை சார்பில்விரைவில் நடைபெறவுள்ள மாநில தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி தலைமை ஆசிரியர் மாதவன், உடற்கல்வி ஆசிரியர் பரந்தாமன், ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x